search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் செயலி"

    • 19-ந் தேதி முதல் 30ந் தேதி வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்த கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
    • 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர் :

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படும் ஒன்று முதல் 5-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.திட்டத்தின்கீழ் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான வளரறி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தொகுத்தறி மதிப்பீடு செய்ய அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி வருகிற 19-ந்தேதி முதல் 30ந் தேதி வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- இந்த மதிப்பீடு 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 4-ம்வகுப்பு, 5-ம் வகுப்புக்கு பிரின்ட் அவுட் முறையில் தேர்வு நடக்கிறது. மாணவர் வருகை, ஆசிரியர் வருகை, எமிஸ் பதிவேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் டிஜிட்டல் மொபைல் செயலி மூலம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.தற்போது தொகுத்தறி மதிப்பீட்டையும் செல்போனில் மேற்கொள்ளும் பட்சத்தில் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடும்.

    இதற்கென பிரத்யேக மொபைல் டேப்லெட் இருந்தால் கையாள எளிமையாக இருக்கும். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் இதற்கான ஏற்பாடுகள் செய்தால் உபயோகமாக இருக்கும்.1 முதல் 5-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கற்றல் வாய்ப்புகளை மாணவர்கள் இழந்ததாக கூறப்படுகிறது. இதனை மீண்டும் ஈடு கட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் செல்போன் செயலியில் தேர்வு எழுதுவதை காட்டிலும் எழுத்து பூர்வமாக தேர்வை எழுத வைத்தால் எழுத்துப்பயிற்சி அளித்ததாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறந்த செல்போன் செயலிகளை உருவாக்கிய 7 கல்லூரிகளின் மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
    • முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சிவகாசி

    மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ.டி.சி. இன்னோவேசன் செல் இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப திறன்களை அறியும் இறுதிப்போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மையத்தில் 2 நாட்கள் நடந்தது.

    முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டாம் நாள் ஹேக்கத்தான் போட்டியின் நிறைவு விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, மத்திய கல்வி அமைச்சரகத்தின் மைய தலைவர் உத்யன் மவுரியா,

    ஐ.சி.டி. அகாடமியின் மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    கல்லூரிகளுக்கு இடையேயான 30 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 7 குழுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த டிஜிட்டல் கற்றல் செயலியை உருவாக்கிய சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கண்டென்ட் கிரியேசன் செயலியை உருவாக்கிய கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, டிஜிட்டல் கல்வி செயலியை உருவாக்கிய சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, விளையாட்டு அடிப்படையில் கற்பிப்பதற்கான செயலியை உருவாக்கிய மும்பை சங்கி பொறியியல் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு உதவும் வகையில் செயலியை உருவாக்கிய பஞ்சாப் தாப்பார் என்ஜினீயரிங் கல்லூரி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கல்வி வழிகாட்டுதல், தகவல் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை உருவாக்கிய டெல்லி சூரஜ்மால் தொழில்நுட்ப கல்லூரி, வாசிப்பு திறனை மேம்படுத்துவற்கு தேவைப்படும் மென்பொருளை உருவாக்கிய இந்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 7 கல்லூரி மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இேத போன்று ஜூனியர் ஹேக்கத்தான் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி குழுக்களின் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் மற்றும் பேராசிரியர் இணைந்து செய்திருந்தனர்.

    ×